உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நிதி

புதுச்சேரி கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நிதி

புதுச்சேரி: கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நிதி உதவி அளிக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் பட்ஜெட் உரை:பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷே கம் நடைபெறாத கோவில்களின் திருப்பணிக்காக நிதி உதவி அளிக்கப்படும். அனைத்து கோவில்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கடவுள் உருவச் சிலைகள் மற்றும் அசையும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மின்னணு முறையில் பராமரிக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அசையா சொத்துகளை நில அளவை செய்து அவற்றை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக் கப்படும். குத்தகைக்கு விடப்பட்ட கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகை தொகை யை வசூலித்து அதன் மூலம் வருவாயை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டு களில் பொறிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்படும். இணையதளத்திலும் மக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !