வேளாங்கண்ணியில் கொடியேற்றம்
ADDED :2246 days ago
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, இன்று 29ம் தேதி மாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, இன்று 29ல் மாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தஞ்சை பிஷப், தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்கிறார். தொடர்ந்து, பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற் கருணை ஆசிர், தமிழில் திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், வேளாங்கண்ணி வந்துள்ளனர்.