உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போலீஸ் ஸ்டேஷனாக மாறிய சிவன் கோயில்

போலீஸ் ஸ்டேஷனாக மாறிய சிவன் கோயில்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள சிவன் கோயி லை போலீஸ் ஸ்டேஷனாக மாற்றியதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனுஷ்கோடியில் ஏராளமான பக்தர்கள்  திதி, தர்ப்பணம் பூஜை செய்து, ராமபிரான் இலங்கை க்கு அமைத்த பாலத்தை கண்டு தரிசித்தனர். புனிதம், சுற்றுலா தலமாக விளங்கும் தனுஷ் கோடியில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைத்த போது அரிச்சல்முனையில்  மேற்கூரையு டன் சிவன் கோயில் அமைத்தனர்.  சிலை வைப்பதில் தாமதம் ஆனதால், கோயிலுக்குள் மனநலம் பாதித்தவர்கள் அசுத்தம் செய்தனர். இதனை  பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் முன்வராத நிலையில், திடீரென போலீசார் கோயிலை தனுஷ்கோடி புறக்காவல் நிலையமாக மாற்றி உள்ளனர். இதற்கு ஹிந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராடிய பிறகே ராமேஸ்வரம் கோயி லில் நீராடுவர்.  இங்கிருந்து இலங்கைக்கு ராமர் கட்டிய பாலத்தையும் தரிசித்துள்ளனர். ஆன்மிக வரலாற்று தலத்தில் இருந்த சிவன் கோயிலை போலீஸ் ஸ்டேஷனாக மாற்றியது கண்டனத்திற்குரியது. எனவே கோயிலில் இருந்து போலீசார் வெளியேறவும், உடனடியாக சிவன் சிலை பிரதிஷ்டை செய்ய  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மகேஷ் கூறுகையில், இக்கோயிலில் சிலை வைக்காததால், பலரும் அசுத்தம் செய்தனர். இதனால் இரு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் பயன்படுத்த கலெக்டர் அனுமதித்ததால், புறக்காவல் ஸ்டேஷன் அமைத்து போலீசார் பணிபுரிகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !