உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகளுக்கு தற்காலிக மின் இணைப்பு

விநாயகர் சிலைகளுக்கு தற்காலிக மின் இணைப்பு

சென்னை: பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின், விநாயகர் சிலைகளுக்கு,  மின் வினி யோகம் செய்யுமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின்  வாரியம் அறிவுறுத்தி யுள்ளது. தமிழக மின் வாரியம், கட்டுமானம், திருவிழா  போன்றவற்றிற்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்குகிறது. ௧ யூனிட்டிற்கு, 11  ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

செப்., 2ல், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோர், முறைப்படி மின் சப்ளை கேட்டால், பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து, மின் திருட்டில் ஈடுபடாததை உறுதி செய்து, தற்காலிக பிரிவில், மின் வினியோகம் செய்யுமாறு, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !