உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே, வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில்,  மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.

கோவில் புனரமைக்கப்பட்டு விருந்தீஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன்,  பெருமாள், ஆஞ்ச நேயர், சனீஸ்வரன், காலபைரவர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட  தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி கட்டப்பட்டுள்ளன. இக்கோவில்  கும்பாபிஷேகம் ஜூலை, 11ம் தேதி விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, 48  நாட்கள் மண்டல பூஜை இம்மாதம், 28ம் தேதி வரை நடந்தது. கடந்த, 48  நாட்களும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று 29ல், அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலில் குவியத்துவங்கினர்.

விருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அன்னதானமும் நடந்தது.  நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !