உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு: போலீஸ் கட்டுப்பாடு

சென்னையில் விநாயகர் சிலைகளுக்கு பாதுகாப்பு: போலீஸ் கட்டுப்பாடு

சென்னை : ‘விநாயகர் சிலைகளுக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பை உறுதி செய்ய, சுழற்சி முறையில், ஐந்து பாதுகாவலர்களை, சிலை அமைப்பாளர்கள் நியமிக்க வேண்டும்’ என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

நாடு முழுவதும், செப்., 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, பொது மக்கள், ஹிந்து அமைப்புகள், போலீசார் அனுமதித்த இடங்களில், விநாயகர் சிலைகளை வைத்து, வழிபட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர். சென்னையில், இதற்கு முன், விநாயகர் சிலைகளை வைக்க, காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி, மின் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், தனித்தனி யாக அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது.இதை, சென்னை மாநகர போலீசார், எளிமைப் படுத்தி உள்ளனர்.ஒற்றை சாளர முறையில், பூக்கடை, புளியந்தோப்பு என, சென்னையில் உள்ள, 12 காவல் மாவட்டங்களிலும், இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள அதிகாரிகளை நியமி த்து, அவர்களே, மற்ற துறைகளிடம் அனுமதி பெற்று தருவர் என, ஆக., 17ல், அறிவிக் கப்பட்டது.

அதன்படி, சென்னை முழுவதும், 2,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, தற்போது, விநாயகர் சிலை வைக்கும் பணி கள், தீவிரமாக நடந்து வருகின்றன.விநாயகர் சிலைகளை வைக்க, போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், ரசாயன கலவைகளால் செய்த சிலை களை தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம், பீடத்துடன் சேர்த்து, 10 அடிகளுக்குள் இருக்க வேண்டும்சிலைகள் வைக்கப்படும் இடம், தனியாருக்கு சொந்தமானதாக இருந்தால், அதன் உரிமையாளர்களிடம், ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்

பிற மத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களின் அருகிலோ, போக்கு வரத்திற்கு இடையூறாகவோ, சிலைகளை வைக்கக் கூடாதுபிற மத உணர்வுகளைப் புண்படுத் தும் வகையில், கோஷங்கள், பாடல்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது அனுமதியின்றி மின்சாரம் எடுக்கக்கூடாது. அப்படி செய்தால், அது சட்டவிரோத செயலாகும்தற்காலிக பந்தல் அமைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடியவையாக இருத்தல் கூடாது பந்தல்களில் மின் உபகரணங்கள் இருப்பின், அவை தீயணைப்பு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும்

எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை, சிலை வைக்கும் இடத்திற்கு அருகில் வைக்கக்கூடாது. தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகளை, கடுமையாக பின்பற்ற வேண்டும்இரவு, 10:00 காலை, 6:00 மணி வரை, ஒலிபெருக்கிகளையோ, வெடிகளையோ பயன்படுத்தக்கூடாதுகாவல் துறையால் வகுக்கப்பட்ட பாதையில் மட்டுமே, சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே, சிலைகளை கரைக்க வேண்டும்சிலை வைக்கப்படும் இடத்தில், 24 மணி நேரமும் பாதுகாப்பை உறுதி செய்ய, சுழற்சி முறையில், ஐந்து பாது காவலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !