உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2 ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு

2 ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு

திருவாரூர்: குடவாசல் அருகே, கோவில் குளத்தை துார்வாரும் போது, பழமையான, இரண்டு, ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, மணக்கால் அய்யம்பேட்டை அடுத்த, ராபட்டீஸ்வரம் கிராமத்தில், பிடாரி அம்மன் கோவில் குளம் உள்ளது. இக்குளத்தில், நேற்று துார் வாரும் பணி நடந்தது. ஜே.சி.பி., இயந்திரம் மூலம், துார் வாரிய போது, ஒரே பீடத்தில், 2.5 அடி உயரம், 80 கிலோவில், சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கிராம மக்கள், அந்த சிலைகளை மீட்டு, மாலை அணிவித்து வழிபட்டனர்.தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று, சுவாமி சிலைகளை மீட்டு, திருவாரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அதிகாரிகள் கூறுகையில், தொல்லியல் துறை ஆய்வுக்குப்பின், சுவாமி சிலைகளின் மதிப்பு தெரிய வரும் என்றனர். கிராம மக்கள் கூறுகையில், 1970ல், அப்பகுதியில் உள்ள, சஷேபுரீஸ்வரர் கோவில் இருந்த சோமாஸ்கந்தர், அம்பாள் சிலைகள் காணாமல் போயின. அந்த சிலைகள் தான், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகளை, கிராமத்தில் வைத்து பூஜை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !