உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் புதிய பள்ளியறையில் எழுந்தருளல்

ராமேஸ்வரத்தில் சுவாமி அம்மன் புதிய பள்ளியறையில் எழுந்தருளல்

 ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அலங்கரித்த புதிய பள்ளியறையில் சுவாமி, அம்மன் எழுந்திருளினர். ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆக.,5 ல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் நடந்தது. இதன் பின் ஆவணி மாதத்தில் புதிய பள்ளியறையில் சுவாமி, அம்மன் எழுந்தருள்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு அம்மன் சன்னதி அருகே உள்ள பள்ளியறையில் மலர்களால் அலங்கரித்ததும், வெள்ளி பல்லாக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி புதிய பள்ளியறையில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !