திருக்கோவிலூர் இரட்டை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
ADDED :2325 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள ஸ்ரீ ஜெயகணபதி, விஜய கணபதி இரட்டை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. திருக்கோவிலூர், ஏரிக்கரை மூளையில் உள்ள, ஸ்ரீ ஜெய கணபதி, விஜய கணபதி இரட்டை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், கடம் புறப்பாடாகி மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், 9:00 மணிக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பழ அலங்காரத்தில் அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத விநியோகம், உற்சவர் வீதி உலா நடந்தது.