உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்நடந்தது. 285 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரத்தில் காட்டூரணி, சன்னதி தெருவில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பரமக்குடி டவுன், எமனேஸ்வரம், நயினார்கோயில் பகுதியிலும், கமுதி பகுதியில் கமுதி ராமசாமிபட்டி, அபிராமம் கோவிலாங்குளம், பெருநாழி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. ராமேஸ்வரத்தில் டவுன், ராமர் தீர்த்தம் பகுதியில் விழா நடந்தது. கீழக்கரையில் புத்தேந்தல், சாயல்குடி, வாலிநோக்கம், திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் வழுதுார் பகுதியில் உள்ள அருளொளி விநாயகர் கோயிலில் சதுர்த்திவிழாவை முன்னிட்டு விநாயகருக்குசிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் மாலை உலக நன்மை வேண்டியும், பருவமழைவேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை ஆத்மசாந்தி நிலையஅறங்காவலர் குழு உறுப்பினர் ஆசிரியர் ஆறுமுகம், ஈஸ்வர சரவணன், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். நேற்று நாக மண்டகப்படி சென்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்செலுத்தினர். விநாயகப்பெருமானுக்கு பாலபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனைநடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வழுதுார் அருளொளி மன்றத்தினர்செய்திருந்தனர்.

திருவாடானை டவுனில் 4 இடங்களிலும், தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. முதுகுளத்துார், காக்கூர், பேரையூர், தேரிருவேலி,கீழத்துாவல், கடலாடி, இளஞ்செம்பூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.

*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், பஸ்ஸ்டாண்டு ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.  அதனை தொடர்ந்து மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் முன்பு புதிதாக கட்டபட்ட விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தாசில்தார்  சேகர், மண்டலதுணை தாசில்தார் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொண்டியில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. சின்னத்தொண்டியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுக்குடி கடற்கரையில் கரைக்கபட்டது. இந்து மக்கள் முன்னேற்ற கழக தலைவர் அண்ணாதுரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இந்து முன்னணி சார்பில் 46 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்.தினர்.  இதன் படி ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தி நாளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகருக்கு கணபதி ேஹாமம், தீபாராதனை நடத்தப்பட்டு, தொடர்ந்து உறியடி, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் போன்றவை அளிக்கப்படுகிறது. பரமக்குடியில் இரண்டு அடி முதல் 15 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு, இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 6:௦௦ மணிக்கு பெருமாள் கோயில் படித்துறை வைகை ஆற்றில் கரைக்கப்படும்.  இதே போல் பரமக்குடி பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், மீனாட்சி அம்மன், முத்தாலம்மன், அனுமார் கோயில் மற்றும் அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரம் கோயில், இந்து அமைப்பினர் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்தனர். நேற்று விநாயகர் சதுர்த்தி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மேலவாசல் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின் கோயிலில் இருந்து வெள்ளி மூஞ்சுரூ வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி, ரதவீதியில் உலா வந்தார். மேலும் ராமேஸ்வரம் திட்டகுடி, முத்துராமலிங்கம் தேவர் நகர், இந்திரா நகர், சிவகாமி, காந்தி நகர் உள்ளிட்ட பல தெருக்களில் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி, நகர் செயலர் நம்புராஜன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலர் குருசர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் 5 முதல் 9 அடி வரை பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை, மகா தீபாரதனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

முதுகுளத்துார்: முதுகுளத்துார் காந்திசிலை அருகே உள்ள விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக மற்றும் சதுர்த்தி சிறப்புபூஜை நடைபெற்றது.விநாயகருக்கு பால், சந்தனம், பன்னீர் உள்பட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.பின்பு விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தனர். மாலை 6:௦௦ மணிக்கு கோயிலில் இருந்து பஸ் நிலையம்,அரசு மருத்துவமனை,வழிவிடு  முருகன் கோயில் வழியாக விநாயகர் திருவீதி உலா நடந்தது. கோயில் சார்பாக கொலுக்கட்டை வழங்கப்பட்டது.


விநாயகர் சிலைகள்:  ராமநாதபுரத்தில் 63 இடங்களிலும், பரமக்குடியில் 65, கமுதி 16, ராமேஸ்வரத்தில் 89,கீழக்கரையில் 30, திருவாடானையில் 12, முதுகுளத்துாரில் 10 இடங்களிலும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அனைத்து பகுதியிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடந்தது. இதில் அந்தந்தப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !