இவருக்கு இரண்டு தாயார்
ADDED :2226 days ago
முருகனுக்கு கங்கையின் புதல்வன் என்னும் பொருளில் ’காங்கேயன்’ என பெயர் வந்தது. ஆனால் விநாயகருக்கு கங்கையுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், அவரும் கங்கையைத் தன் தாயாக ஏற்றார். நீரைக் கண்டதும் மகிழ்வது யானையின் இயல்பு. யானை மட்டுமே துதிக்கையால் நீரை உறிஞ்சி பீய்ச்சாங்குழல் போல தன் உடம்பு முழுவதும் வாரி இறைத்துக் கொண்டு மகிழும். ஆனைமுகம் கொண்ட விநாயகரும், பார்வதியோடு, கங்கையையும் தாயாக ஏற்றதால் ’த்வைமாதுரர்’ என பெயர் பெற்றார். இதற்கு ’இரண்டு தாயார் கொண்டவர்’ என்பது பொருள்.