புதுப்பொலிவு பெறும் பழநி ‘ரோப் கார்’
பழநி: பழநி முருகன் கோயில் ‘ரோப்கார்’ பராமரிப்பு பணியில் பெட்டிகளை வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.
இங்குள்ள ‘ரோப்கார்’ மாதத்தில் ஒருநாளும், ஆண்டு பராமரிப்புக்காக ஒருமாதம் வரையும் நிறுத்தப்படும். இவ்வாண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 29 முதல் ‘ரோப்கார்’ நிறுத்தப்பட்டு கம்பிவடம், உருளைகள், தேய்மான பாகங்கள் மாற்றப்படுகிறது. தற்போது 8 பெட்டிகளிலும் வண்ணம்பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. விரைவில், கம்பிவடத்தில் பெட்டிகளை பொருத்தி, குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ரோப்கார் வல்லுனர்கள் ஆய்வுசெய்து முழுமையாக புதுப்பிக்கிறோம். கொல்கட்டாவில் இருந்து புதிய ‘சாப்ட்’ வருகிறது. அடுத்த வாரம் சோதனை ஓட்டத்தில் பாதுகாப்பு உறுதி செய்தபின், ‘ரோப்கார்’ பக்தர்கள் பயன் பாட்டுக்கு இயக்கப்படும்’’ என்றார்.