உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோட்டில் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஈரோட்டில் சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ஈரோடு: சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக  நடந்தது.
ஈரோடு, சூரம்பட்டி வலசு, சுயம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா,  நேற்று 5ல், நடந்தது. காலை, 9:30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, கோவில்  கோபுர கலசத்துக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து  விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபி ஷேகம் செய்யப்பட்டது. பின்,  சுயம்பு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தை காண, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்  குவிந்தனர். கூட்ட நெரிசலால், கோவில் பகுதியில் வாகன போக்குவரத்து தடை  செய்யப்பட்டது. மண்டல பூஜை, இன்று 6ல், முதல் தொடங்குகிறது.

நான்கு பெண்களிடம் நகை பறிப்பு: கூட்ட நெரிசலை பயன்படுத்தி, நான்கு  பெண்களிடம், மர்ம ஆசாமிகள் நகை பறித்து சென்றனர். இதேபோல் பல ஆண்  பக்தர்கள், விலை உயர்ந்த மொபைல் போன்களை பறிகொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !