கிருஷ்ணகிரி ராஜகணபதிக்கு குத்துவிளக்கு பூஜை
ADDED :2230 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தெருவை சேர்ந்த பொது மக்கள், பத்தாவது ஆண்டாக விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த, 2ல், ராஜகணபதி விநாயகர் சிலையை வைத்து தினமும் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வந்தனர். நான்காவது நாளான நேற்று இரவு, பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் சங்கர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.