திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருணகிரிநாதருக்கு மணி மண்டபம்
ADDED :2306 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அருணகிரிநாதருக்கு, 77 லட்சம் ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டுவதற்கான கால்கோள் விழா நடந்தது. இதில், அறநிலை யத்துறை அமைச்சர் ராமசந்திரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கோவில், இணை ஆணை யர் ஞானசேகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவை, ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.