ஆவணி சுக்ல பட்ஷ ஏகாதசி ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை
ADDED :2234 days ago
காரமடை: காரமடை ரங்கநாதர் கோவிலில், ஆவணி மாத சுக்லபட்ஷத்தில் வரும் ஏகாதசி விழா, நேற்று நடந்தது.
அதிகாலையில், திருப்பள்ளி எழுச்சி, கோ தரிசனம், கோ பூஜை, மூலவருக்கு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, நடந்தது.தொடர்ந்து புண்ணியாக வாசனம், விஷ்வக்சேனர் ஆராதனை, நவ கலசம் ஆவாகனம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமான், உற்சவ மூர்த்திகளுக்கு, பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள், மற்றும் மூலிகை திரவியங்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மேளதாளங்கள் முழங்க, கோவிலின் உட்பிரகாரத்தில், ரங்கநாதர் பச்சை பட்டு உடுத்தி வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்தார். தேவிமார்களுடன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.