சென்னிமலை முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
ADDED :2260 days ago
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, பனியம்பள்ளி கிராமத்தில், விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, முத்தாளம்மன், பச்சதொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த ஆண்டு நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 9ல்), ஓராண்டு நிறைவடைந்தது.
இதையடுத்து கணபதி யாகம், சிறப்பு பூஜைகள், யாக வேள்வி, 108 சங்கு பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. சென்னிமலை முருகன் கோவில் விளா பூஜை ஸ்தானிகம் ராஜப்பா சிவாச்சாரியர், சென்னிமலை வட்டார பிராமணர்கள் சங்க செயலாளர் செல்வரத்தின குருக்கள் தலைமையில் பூஜை நடந்தது.