இறைவனில் யாருக்கு என்ன பிரியம்!
ADDED :2238 days ago
எல்லாம் வல்ல சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவர், பெருமாள் அலங்காரப் பிரியர். இவ்வகையில் மற்ற கடவுளர்கள் என்ன பிரியர் என்பதை ஞான நூல்கள் விவரிக்கின்றன.
அவ்வகையில், அம்பாள் சங்கீதப் பிரியையாம். முருகப்பெருமான் நாமாவளிப் பிரியராம். சூரியதேவனோ நமஸ்காரப் பிரியனாம். விநாயகர் நைவேத்தியப் பிரியராம். அதனால்தான் விநாயகருக்கு மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், கனிகள், லட்டு, கரும்பு, அவல் பொரி என விதவிதமான நைவேத்தியங்கள் சமர்ப்பித்து விநாயகரை வழிபடுகிறோம்.