தெப்பத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பவனி!
ADDED :4969 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் தெப்போற்சவம், நேற்றுமுன்தினம் துவங்கியது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்போற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு தெப்போற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. மாலை 6 மணிக்கு, காமாட்சியம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பக்குளத்தை வலம் வந்தார். நேற்று இரவு இரண்டாம் நாள் உற்சவம் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு, தெப்போற்சவம் நிறைவு விழா நடைபெற உள்ளது.