உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி நரசிம்மசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி நரசிம்மசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெங்கட்டம்பட்டி ஓபிளி நரசிம்மசுவாமி கோவில்  கும்பாபிஷேக விழா நேற்று 12ல்நடந்தது. வெங்கட்டம்பட்டியில் பழமையான ஓபிளி  நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.

இதை புதுப்பிக்கும் பணி ஆறு மாதத்துக்கு முன் துவங்கப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 9ல் துவங்கியது. அன்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 10 காலை, 9:00 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு ஆஞ்சநேய, கருட, சுதர்தன, நவகிரக ஹோமங்கள் நடந்தன. 11 காலை, 6:00 மணிக்கு, கணபதி, லட்சுமி, ஓபிளி நரசிம்மர், பலிபீடம், கருடன், ஆஞ்சநேயர் பிரதிஷ்டை நடந்தது. 9:00 மணிக்கு, பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகளுக்கு உயிரூட்டல் நிகழ்ச்சியும், உபசார பூஜைகளும் நடந்தன.

இரவு, 7:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு, அர்ச்சகர் கள் வேத, மந்திரங்கள் ஓத, கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து ஓபிளி நரசிம்மர், லட்சுமி திருக்கல்யாண உத்சவம் நடந்தது. இதில்,  திரளானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற  பக்தர்களுக்கு, கோவில் விழாக்குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !