உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் பண்ணையம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம்

ராசிபுரம் பண்ணையம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, பண்ணையம்மன் கோவிலில் ஆவணி தேர் திருவிழா  நடந்தது. ராசிபுரம் அருகே, கொழிஞ்சிப்பட்டியில் பிரசித்தி பெற்ற பண்ணையம்மன்  கோவில் உள்ளது. ஆவணி மாத கடைசி வாரத்தில் தேர் திருவிழா நடப்பது  வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 6ல் கிராம சாந்தியுடன் தொடங்கியது.  

மறுநாள் காலை கொடியேற்றம், மாலையில் சமுதாய கூடத்திற்கு  பண்ணையம்மன் உற்சவர் எழுந்தருளினார். நேற்று முன்தினம் (செப்., 11ல்) மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் ஒரு பக்கம் வடம்பிடித்து இழுத்து வந்தனர். நேற்று 12ம் தேதி  காலை, பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலை, திருத்தேர் நிலை சேர்த்தலும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு சத்தாபரணம், வாணவேடிக்கை நடத்தப்பட்டது. இன்று 13ம் தேதி  காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !