அலங்காநல்லுாரில் பொங்கல் திருவிழா
ADDED :2273 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே குறவன்குளம் முனியாண்டிபுரத்தில் எல்லம்மாள், தல கொண்டம்மாள், மகாகாளியம்மாள் மற்றும் கருப்பசாமி கோயில்களின் ஆவணி மாத உற்ஸவ திருவிழா நடந்தது.
முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வரப்பட்டு, பொங்கல் வைத்து சக்தி கிடாய் வெட்டி அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன. இரண்டாம் நாள் கருப்பசாமிக்கு பொங்கல் வைத்தும், கொம்பன் குத்தியும் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மனின் சக்திகரகம் மற்றும் முளைப்பாரிகள் கரைக்க பூஞ்சோலை சென்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.