உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி பவுர்ணமி : லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஆவணி பவுர்ணமி : லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள்   மலையை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆவணி மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 8:19 மணி முதல், இன்று காலை, 10:19 மணி வரை உள்ளது. இதனால், நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !