சேலம் ராஜகணபதிக்கு புஷ்பாஞ்சலி
ADDED :2249 days ago
சேலம்: சேலம், ராஜகணபதி கோவிலில், கடந்த, 2ல், விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தங்க கவசம் அலங்காரத்தில், ராஜகணபதி அருள்பாலித்தார். மூன்றாம் நாளில், திருக்கல்யாண உற்சவம், 11ம் நாளில், சத்தாபரணம் நடந்தது. தவிர, தினமும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராஜகணபதி, இரவில், திருவீதி உலா வரச்செய்தனர். விழா நிறைவாக, 12ம் நாளான, நேற்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன், வசந்த உற்சவம் நடந்து, சப்பரத்தில், வீதியுலா வரச்செய்தனர். தொடர்ந்து, 108 திரவியங்களால், கணபதி ?ஹாமம், 16 திரவியங்களால் அபிஷேகம், 1,008 லிட்டர் பாலாபிஷேகம் செய்து, 100 கிலோ மலர்களால், புஷ்பாஞ்சலி நடத்தி, திரளான பக்தர்கள் வழிபட்டனர். 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.