பலே! ராம்போலா!
ADDED :2258 days ago
அயோத்திக்கு அருகிலுள்ள ஹரிபூர் கிராமத்தில் கோயில் திருவிழா நடந்தது. நரஹரிதாஸ் என்பவர் தினமும் உபன்யாசம் செய்தார். ஒருநாள் அவர் தன் பேச்சை பக்தர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் என அறிய விரும்பினார். ”நேற்று நான் பாடிய ராமாயணப் பாடல் யாருக்காவது நினைவில் இருக்கிறதா?” எனக் கேட்டார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ராம்போலா என்னும் அனாதை சிறுவன் ராகத்தோடு பாடினான். ’பலே! ராம்போலா’ என பாராட்டி அவனைத் தன் குழந்தையாக ஏற்றார். இச்சிறுவனே துளசிதாசராக மாறினார்.