உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாம் அனைவரும் சமம்

நாம் அனைவரும் சமம்

விவசாயி ஒருவன் தன் வாத்துகளை இனம் பிரிக்க சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்ளைத் தீட்டினான். ஒரு பிரிவு வாத்துகள் இன்னொரு பிரிவிடம் செல்ல முடியாதபடி வேலியிட்டான். ஒன்றுக்கொன்று பழக முடியாமல் அவை வருத்தப்பட்டன. ஒருநாள் மழையில் வாத்துக்கள் நனைய, வெண்ணிற வாத்துகளாக அவை மாறின. இப்படித் தான் மனிதனின் நிலையும். ஓரிடத்தில் வசிக்கும் மக்கள் கூட, தங்களுக்குள் இனம், மொழி, மதம் என பிரிவினையால் தவிக்கின்றனர். அனைவரும் சமம் என்பதை உணர்ந்தால் மனிதர்கள்  அன்பால் இணைந்திடுவர். அப்போது நட்புணர்வுடன் பழகுவர். ”சகோதரர்கள் ஒருமித்து ஒருமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது என்பதை உணருங்கள்”

பொன்மொழிகள்

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.
* ஏழையை அண்டை அயலவனும் வெறுப்பான். ஆனால் பணக்காரனுக்கோ நண்பர்கள் பலர் உண்டு.
* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைபிடியுங்கள்.
* தீமை செய்தவருக்கும் நன்மை செய்தால், மேன்மை உண்டாகும்.
* வறுமையோ செல்வப் பெருக்கையோ  ஜெபத்தின் போது கேட்க வேண்டாம். அன்றாட தேவையை மட்டும் கேளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !