உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்விக்கடவுள்

கல்விக்கடவுள்

திருப்பதி கோயிலுக்கு அருகில் புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இதன் வடமேற்கு மூலையில் வராகர் கோயில் கொண்டிருக்கிறார். இவரே ஏழுமலையானுக்கு மலையில் இடம் கொடுத்தவர் என்பதால் திருப்பதிக்கு ’வராக க்ஷேத்திரம்’ என்றும் பெயருண்டு. தினமும் வராகருக்கு நைவேத்யம் படைத்து அறிவிப்பு மணி ஒலித்த பிறகே, ஏழுமலையானுக்கு  நைவேத்யம் படைக்கப்படும். ஞானப்பிரான் என்னும் பெயர் கொண்ட வராகரை தரிசித்தால் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !