செல்வம் பெருக்கும் குபேர தீபம்
ADDED :2219 days ago
லட்சுமி குபேரர் செல்வத்தின் அதிபதி. சிவனை நோக்கி தவமிருந்த இவர், வடதிசையின் அதிபதியாகவும் இருக்கிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் திருமணத்திற்கு கடன் கொடுத்தவரும் இவரே. கலியுகம் முடியும் வரை பெருமாள், வாங்கிய கடனுக்கு குபேரனிடம் வட்டி கட்டுவதாக ஐதீகம். அந்த குபேரரின் அருள் பெற வெள்ளிக்கிழமை, பூரட்டாதி நட்சத்திரம், தேய்பிறை பிரதமை திதி ஆகியவை ஏற்றவை. வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளும் இவருக்கு உகந்தது. இந்த நாட்களில் குபேர தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றி ’ஓம் குபேராய நமஹ’ என ஜபிக்க செல்வம் பெருகும்.