உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோடி முறை கேட்டாலும்...

கோடி முறை கேட்டாலும்...

பிற தெய்வங்கள் அசுர சக்திகளை அழிக்க, முருகன் மட்டும் சூரபத்மனை மயில், சேவலாக மாற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டார். இதனால் ’சூரனுக்கு வாழ்வு அளித்தவர் முருகன்’ என போற்றுகிறோம். கருணை மிக்க முருகனிடம் கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.

உதவியை ஒருவரிடம் ஒருமுறை கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்வார். எத்தனை கோடி முறை வேண்டுதல்கள் வைத்தாலும், முருகன் தன் அடியார்கள் விஷயத்தில் கோபம் கொள்வதில்லை. ’அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமானே’ என முருகனை சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !