அருணாசலேஸ்வரரர் கோவிலில் ரூ.88 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :2573 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பவுர்ணமி உண்டியலில், 88 லட்சத்து 7,317 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து, நேர்த்தி கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பவுர்ணமி கடந்த, 14ல், முடிந்த நிலையில், நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 88 லட்சத்து 7,317 ரூபாய், 142 கிராம் தங்கம், 723 கிராம் வெள்ளி நகைகள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.