உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி கோயிலில் செப்.29ல் நவராத்திரி விழா

இளையான்குடி கோயிலில் செப்.29ல் நவராத்திரி விழா

இளையான்குடி : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில்  நவராத்திரி திருவிழா செப். 29ம் தேதி துவங்குகிறது.

இளையான்குடி ஆயிர வைசிய சபையினருக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில்  செப். 29ம் தேதி துவங்கி அக்.11ம் தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான  செப். 29ம் தேதி மாலை 6:30 மணி க்கு மகா கணபதி ேஹாமம்,  காப்புக்கட்டுதலுடன் விழா நடக்கிறது. இரண்டாம் நாள் இரவு 7:30 மணிக்கு  ராஜாங்க சேவையும், மூன்றாம் நாள் காமாட்சி அம்மன் அலங்காரத்திலும்  அம்மன் காட்சியளிப்பார்.

அக்டோபர் 8 ம்தேதி அம்மன்கோயில் திடலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி  அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும். 11ம் தேதி புஷ்ப பல்லக்கு சேவையுடன் விழா  நிறைவு பெறும். விழா ஏற்பாடு களை ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் செய்து  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !