திருத்தணி முருகன் கோவில்களில் நவராத்திரி துவக்கம்
ADDED :2234 days ago
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உபகோவில்களான ஆற்காடுகுப்பம், காமாட்சி அம் மன் உடனுறை சோளீஸ்வரர் கோவில் மற்றும் மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் களில், நவராத்திரி விழா, நேற்று 29ல் துவக்கியது. அடுத்த மாதம், 13ம் தேதி வரை நடக்கிறது.
விழாவையொட்டி, கொலு பொம்மைகளை கோவில் வளாகத்தில் வைத்து, தினமும், இரு வேளை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மத்துார் கோவிலில், வரும், 9ம் தேதி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தேங்காய், பூ அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கும்.மேலும், மூலவர் தினமும், ஒவ்வோர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.