திருப்பதி பிரம்மோற்சவம்: தேரோட்டம் கோலாகலம்
ADDED :2229 days ago
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாள் காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமலையில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. அதன்படி, திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம் செப்.,30ல் கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.