புதுச்சேரி புனித பாத்திமா அன்னை ஆலையத்தில் தேர்பவனி
ADDED :2558 days ago
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறிய தேர்பவனி நடந்தது. தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தின், 65ம் ஆண்டு பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னாள் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, வில்லியனுார் ஆலய அதிபர் பிச்சைமுத்து, உப்பளம் பங்குகுரு அருள்புஷ்பம் ஆகியோர், கொடியேற்றி வைத்தனர்.அதைத் தொடர்ந்து, தினசரி சிறிய தேர்பவனி, நவநாள் திருப்பலி நடக்கிறது. நேற்று (அக்., 7ல்) மாலை 6:00 மணிக்கு தேர்பவனி நடந்தது. வரும் 13ம் தேதி காலை 7:30 மணிக்கு, புதுச்சேரி - கடலுார் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், இரவு 7:00 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடக்கிறது.