உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி நவராத்திரி, சரஸ்வதி பூஜை; கோவில்களில் கோலாகலம்

கோபி நவராத்திரி, சரஸ்வதி பூஜை; கோவில்களில் கோலாகலம்

கோபி: நவராத்திரி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, கோபி சாரதா  மாரியம்மன் மற்றும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்களில், நேற்று  (அக்., 7ல்)மாலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதானை நடந்தது. உற்சவர் மற்றும் மூலவர் கையில் வீணையுடன், சரஸ்வதி தேவியாக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* அத்தாணி, ஆப்பக்கூடல், தளவாய்பேட்டை, ஜம்பை, பவானி பகுதிகளில், பவானி  ஆற்றில், பெரும்பாலானோர் ஆயுதபூஜைக்காக வாகனங்களை கழுவினர். இதனால்  கரையோர பகுதி களில், வாகன நெரிசல் ஏற்பட்டது.

* ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மெக்கானிக்  பட்டறைகள், உள்ளிட்ட அனைத்து வியாபார ஸ்தலங்களிலும், ஆயுத பூஜை களை  கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !