பெரியவர்கள் தரும் தங்க இலை
ADDED :2560 days ago
மகாராஷ்டிராவில் வன்னிமரத்தை விஜயதசமியன்று வழிபடுவதோடு, அதன் இலைகளையும் பறிப்பர். இளைஞர்கள் வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து ஆசி பெறுகின்றனர். ஆண்டு முழுவதும் செல்வ வளம் பெறவேண்டும் என்ற அடிப்படையில் அந்த இலைகளைக் கொடுத்து இதை தங்கமாக நினைத்து பெற்றுக்கொள்ளுங்கள் என சொல்லி பெரியவர்கள் ஆசீர்வதிப்பர். மகாராஷ்டிரா கோவில்களில் வன்னிமரத்தடியில் அம்பிகையை வைத்து நவராத்திரி பூஜை நடத்துவர்.