அன்பு வழியில் நடப்போம்
ADDED :2290 days ago
அன்பே உலகின் ஆதாரம். வாழ்வின் நோக்கமும், வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பதும் அன்பு தான். உயிர்கள் எல்லாம் அன்புக்காகத் தான் ஏங்குகின்றன. ஆண்டவர் அன்பின் வடிவமாக இருக்கிறார். ஆனால் அதை உணராமல் நாம் திருப்தியுடன் வாழலாம் எனக் கருதி பணம், பதவியைத் தேடி அலைகிறோம். ஆரம்பத்தில் இவை நன்மை அளிப்பது போல தோன்றினாலும் முடிவில் ஏமாற்றம், தோல்வி, வெறுமையை உண்டாக்கும். ஆனால் அன்பு வழியில் நடந்தால் அதாவது மற்றவரின் துன்பத்தை தீர்த்தால், உயிர்களின் மீதும் இரக்கம் காட்டினால், பசித்தவருக்கு உணவளித்தால் ஆத்ம திருப்தி, மனநிம்மதி ஏற்படும். இதனால் தினமும் ”ஆண்டவரே! அனைவரிடமும் அன்பு காட்டும்படி என்னை உருவாக்கும்” என ஜெபிப்போம்.