உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை நவராத்திரி லட்சார்ச்சனை

சிவகங்கை நவராத்திரி லட்சார்ச்சனை

சிவகங்கை: சிவகங்கை கோகலே ஹால் தெரு சிருங்கேரி சாரதா பீடம் சங்கர  மடத்தில் நவராத்திரி உற்ஸவம்,லட்சார்ச்சனை நடந்தது. செப்.29 முதல் அக். 8 வரை மஹோத்ஸவமும், சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.  அனைத்து நட்சத்திரங்களின் பெயரிலும் அதற்குரிய தேதிகளில் வழிபாடு  நடத்தப்பட்டது.

விஜயதசமியான நேற்று 8ம் தேதி காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை சிறப்பு லட்சார்ச்சனை நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி லலிதா  ஹோமம், துர்கா ஹோமம் மற்றும் தம்பதி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாசினி பூஜையும், கன்யா பூஜையும் நடந்தது. இதில்  ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !