உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பாரம்பரிய பொங்கல் விழா

மழை வேண்டி பாரம்பரிய பொங்கல் விழா

மேலுார்: மேலுார் சூரக்குண்டில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராம மக்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இங்குள்ள சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு பெண்கள் பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களை 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு குலவையிட்டபடி சுமந்து சென்றனர்.  அங்கு கிராமத்து சார்பில் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, அய்யர்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !