திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா
ADDED :2188 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா முன்னிட்டு மகிஷாசூரனை வதம் செய்யும் அம்பு உற்சவம் நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் கடந்த 29ம் தேதி துவங்கியது. தினசரி உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் 9ம் நாள் விஜயதசமி தினத்தில் அம்பு உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, அன்று மாலை அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் சந்திரசேகர சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவதிகை குணபதீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் சூரனை வதம் செய்யும் அம்பு உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.