உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பெருமாளை 2 நாட்கள் இலவசமா தரிசிக்கலாம்

திருமலை பெருமாளை 2 நாட்கள் இலவசமா தரிசிக்கலாம்

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், மூத்த குடிமக்கள் மற்றும் கைகுழந்தைகளின் பெற்றோர், மாதந்தோறும் இரண்டு நாட்கள் பெருமாளை இலவசமாக தரிசிக்க ஏற்பாடு செய்து வருகிறது. இம்மாதம், 15 மற்றும் 29ல், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, காலை, 10.00 மணிக்கு, 1,000 பேர்; மதியம், 2:00 மணிக்கு,2, 000 பேர்; 3: 00 மணிக்கு, 1, 000 பேருக்கு ஏற்பாடு செய்கிறது. அதே போல், 16 மற்றும் 30 ல், காலை, 9:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு, சுபதம் வழியே தரிசனம் வழங்கப்பட உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !