உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓரிவயல் உலகம்மன் கோயிலில் கும்மியாட்டம்

ஓரிவயல் உலகம்மன் கோயிலில் கும்மியாட்டம்

கடலாடி: கடலாடி அருகே ஓரிவயல் உலகம்மன் கோயில் விழா அக்.,1ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. உலகம்மன் கோயில் முன்புபெண்கள் கும்மியாட்டம், ஆண்களின் ஒயிலாட்டம் நடந்தது. பாரிகளை ஒன்றிணைத்து அம்மன் கரகம் முன்புவைத்து சிறப்பு பூஜைகள் நிறைவேற்றப் பட்டது.இரவில் வில்லுப்பாட்டு, அன்னதானம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு அம்மன் கரகம் முன்னே செல்லபெண்கள் முளைப்பாரி சுமந்து வீதியுலா வந்தனர். ஓரிவயல் கண்மாயில் பாரியை கங்கை சேர்க்குமை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !