கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :2188 days ago
இடைப்பாடி: கிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கொங்கணாபுரம் அருகே, ரெட்டிப்பட்டி, கிருஷ்ண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவம், கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரமாக, ரெட்டிப்பட்டி, நாச்சூர், குரும்பப்பட்டி, காவடிக்காரனூர், வெண்டனூர், மாலக்கட்டி வளவு பகுதிகளில் எருது உற்சவம் நடந்தது. நேற்று, ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில், தேரோட்டம் தொடங்கியது. அதேபோல், காவடிக்காரனூரிலிருந்து, எருதுகள் சேர்ந்த தேரும் புறப்பட்டது. ஒரு தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிருஷ்ண பெருமாள், மற்றொரு தேரில், கருட வாகனத்தில் உற்சவர் கிருஷ்ண பெருமாள் வலம்வந்தனர். இரு தேர்களும், கிருஷ்ண பெருமாள் கோவிலை அடைந்தது. இதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.