உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமண கோவிலில் 19ல் புரட்டாசி தேரோட்டம்

வெங்கட்ரமண கோவிலில் 19ல் புரட்டாசி தேரோட்டம்

ஓமலூர்: வெங்கட் ரமண கோவிலில், புரட்டாசி தேரோட்டம், வரும், 19ல் நடக்கவுள்ளது. காடையாம்பட்டி, காருவள்ளி, சின்னதிருப்பதியிலுள்ள, வெங்கட்ரமண சுவாமி கோவிலில், புரட்டாசி தேரோட்ட திருவிழா, கடந்த செப்., 21ல் தொடங்கியது. இன்று காலை, திருத்தேரில் விநாயகர், சிறப்பு பூஜை, 16ல் கொடியேற்றம், திருத்தேர் ஆயக்கால் பூஜை, 17ல், குதிரை வாகனத்தில் திருவீதி உலா, 18ல், திருக்கல்யாண உற்சவம், 19 மதியம், 3:00 மணிக்கு தேரோட்டம், 20ல், வேடுபறி உற்சவம் ஆகியவை நடக்கவுள்ளது. தேரோட்டத்தில், ஏராளமானோர் வருவர் என்பதால், தீவட்டிப்பட்டி போலீசார், 10க்கும் மேற்பட்ட, அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். மேலும், தேரோட்டத்துக்கு தேவையான முன்னேற்பாடுகளை, கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !