அன்னபூரணி அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன்
ADDED :2184 days ago
புதுச்சேரி: சின்னசுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அன்னபூரணி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த செப். 29ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்து வருகிறது. உற்சவத்தின் 16ம் நாளான நேற்று மாலை அங்காளபரமேஸ்வரி அம்மன், அன்னபூரணி அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.