உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று (அக்., 18ல்) ஐப்பசி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.


தமிழகத்தில் புகழ் பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு வாரம்தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், நேற்று (அக்., 18ல்) ஐப்பசி முதல் வெள்ளி என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நண்பகல் பூஜையில் பங்கேற்க பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஐப்பசி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !