திருமலைக்கேணி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றம்
ADDED :2196 days ago
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திண்டுக்கல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். முதல் நாளான நேற்று (அக்., 28ல்) கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. முருகப்பெருமானுக்கும் கொடி மரத்திற்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள், நெய், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனின் அருள் பெற்று சென்றனர்.