உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்பிக்கை வெல்லும்

நம்பிக்கை வெல்லும்

யாரும் உதவிக்கு வரமுடியாத படி இக்கட்டான நிலை யாருக்கும் வரலாம். இந்த நேரத்தில் தைரியசாலிகள் கூட கலங்கி விடுவர். ஒருமுறை மருத்துவர் ஒருவர் வீட்டில் மொட்டை மாடியில் தியானத்தில் இருந்தார். சிறிது நேரம் கண் மூடி அமர்ந்த அவர் முன் நிறைய குரங்குகள் நின்றன. அவை பார்ப்பதற்கு பயங்கரமானதாகவும், வெறியுடன் தாக்க வந்தது போல ஆவேசமாக நின்றன. செய்வதறியாத மருத்துவர் இடத்தை விட்டு எழவில்லை. பயம் அதிகரித்தாலும் நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். ஆண்டவரை மனதார பிரார்த்தித்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது குரங்குகள் அங்கில்லை. நம்பிக்கை ஆழமானதாக இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !