உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

அன்னுார்:அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி, விழா இன்று  29ல், நடக்கிறது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், பழமையானது. குருபகவான் இன்று, 29ல், காலை 3:49 மணிக்கு, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.  

இதையடுத்து, இக்கோவிலில் குருபகவானுக்கு, லட்சார்ச்சனை நடக்கிறது.  அதிகாலை, 2:00 மணிக்கு யாக பூஜை நடக்கிறது. குருபெயர்ச்சி, அதிகாலை, 3:49  மணிக்கு நடக்கிறது. இதை யடுத்து, காலை 6:30 மணிக்கு, நவகிரக ஹோமமும்,  7:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், 8:00 மணிக்கு, மகா தீபாராதனையும்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !