உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நவகிரக நாயகர்க்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, 3:49 மணிக்கு நவக்கிரக குரு பகவானுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.  காலை 9:30 மணிக்கு சன்னதி வளாகத்தில் யாகசாலையில் அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், நவகிரக ஆவாகனம், அக்னி காரியம், அன்னம், ஆகியம் சமிது, நூத்தி எட்டு மூலிகைகளால் குருபகவான் மூலமந்திரம், சாந்தி பரிகார ஹோமங்கள், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மதியம் 12:00 மணிக்கு நவக்கிரக நாயகரான குருபகவானுக்கு கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை, பக்தர்கள் மற்றும் கோவில் குருக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !